திடீர் பரிசோதனைகளில் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
கிளிநொச்சியில் திடீர் பரிசோதனைகளில் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண்டாவளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் 02, 03 மற்றும் 05ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையின் போது குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாள நிலையங்களுக்கு எதிராக இன்றையதினம்(10.02.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தண்டப்பணம்
வழக்கு இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பரந்தன் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஐந்து பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நான்கு உணவகங்கள், இரண்டு வெதுப்பகங்களிற்கு 360000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

அத்துடன் 2 உணவகங்கள், 1 வெதுப்பகம் என்பன குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டார்.
அத்துடன் கண்டாவளை பகுதியில் இரண்டு பலசரக்குகடைகளுக்கு 35000 தண்டப்பணமும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 1 பலசரக்கு கடைக்கு 10000 தண்டப் பணமும் 2 உணவகங்களுக்கு 125000 தண்டப்பணம் விதித்ததுடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக உணவகங்களை மூடுமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.