சுமந்திரனின் வாதம்! மாவீரர் தின நினைவேந்தல் குறித்து நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
மாவீரர் தின நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி கிளிநொச்சி மாவட்டத்தின் 7 பொலிஸ் நிலையங்களாலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.
குற்றவியல் சட்டத்தின் 106இன் கீழ் மாவீரர் நிகழ்வுகளை தடை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் இருக்கும் 7 பொலிஸ் நிலையங்களும் தனித்தனியே மனுவை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் நேற்று முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதிமன்றத்தில் விசாரணை
இதன்போது ஏழு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் முன்னிலையாகினர்.
இந்த மனுக்களுக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
இதன்போது, "நினைவுகூறல் என்பது அடிப்படை உரிமை. அதனை மறுக்க முடியாது. அதேநேரம் குற்றவியல் சட்டத்தின் 106 என்பது பொதுத் தொல்லை விதித்தல் என்பதாகும். அதன் கீழ் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை விதிக்க முடியாது" என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியபோது அதனை மன்று ஏற்றுக்கொண்டது.
106 இன் கீழ் நினைவுகூறலைத் தடுக்க முடியாது என கட்டளையிட்ட நீதிவான், 7 மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 17 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
