முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு
கடந்த காலங்களில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யும் பணியில் சட்டமா அதிபரின் திணைக்களம் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களுக்கு எதிராக அடுத்த சில நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், மற்ற மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கும், ஐந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர்களுக்கும் எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களமும் (CID) மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவும் (Bribery Commission) ஏற்கனவே குறித்த நபர்களுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் சிரேஸ்ட அரச அதிகாரிகள் சிலர் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.