வியாழேந்திரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்துமயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran) உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று(05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டது.
கடந்த 2019 ஏப்பிரல் உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்தனர்.
இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை தொடர்பாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran), இனைப்புச்செயலாளர் யோ.ரொஸ்மன்(Y.Rosman), இளைஞர் ஒருங்கினைப்பாளர் அனோஜன் (Anojan) மாநகர சபை உறுப்பினர்களான செல்வி மனோகரன் (Selvi Manogar) மற்றும் அருள்தாஸ் சுசிகலா (Aruldhas susikala) ஆகியோருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் கார்த்திகை மாதம் 10ம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் கடந்த மாதம் புற்றுநோய் பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
