விதை உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ் உறுதி
யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த விதை உருளைக்கிழங்கு விவகாரத்தில் கமிஷன் நடந்தமைக்கான சாத்திய கூறுகள் அதிகம் தென்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் விவசாய நவீன மாக்கல் செயற் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்காக சுமார் 21 மெட்ரிக் தொன் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது.
தரகு பணம்
ஆனால் குறித்த விதை உருளைக்கிழங்குகள் ஒருவகை பக்ரீரியா தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டதில் தரகு பணம் கைமாறப்பட்டமை தொடர்பில் சந்தேகத்திற்கு இடமான பல விடயங்கள் இடம் பெற்றுள்ளமையை அறிகிறேன்.
மேலும், விடயம் தொடர்பில் விவசாய அமைச்சரிடம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமல்லாது விதை உருளைக்கிழங்கை இறக்குமதி செய்தவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
