யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு

Jaffna University of Jaffna
By Theepan Jul 13, 2026 11:29 PM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுவதுடன், பேராசிரியர் ரகுராம் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது என இடைக்கால கட்டளையொன்றை வழங்கிய பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம், எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்

விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்

முன்னெடுக்கப்படும் விசாரணைகள்

குறித்த வழக்கில் முதலாம் எதிர் மனுதாரராக சிவதர்சினி பரஞ்சோதியும் இரண்டாம் எதிர்மனுதாரராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரும் மூன்றாம் எதிர்மனுதாரராக கங்கா ஜெயபாலனும் நான்காம் எதிர்மனுதாரராக தேசம் ஜெயபாலனும் ஐந்தாம் எதிர்மனுதாரராக சிறீதயாளன் சிறீபிறிந்தரனும் ஆறாம் எதிர்மனுதாரராக பரமசிவம் பவதாரணியும் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு | Case Filed Professor Raghuram Court Respondents

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முதலாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரைக்கும் அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது. 

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.

எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றில் முன்னிலையாகி தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

எதிர் மனுதாரரின் பதிவு

எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும் காரணங்காட்டுதலுக்காகவும் ஜூலை 27ஆம் திகதிக்கு வழக்கை மன்று திகதியிட்டது. 

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு | Case Filed Professor Raghuram Court Respondents

இதேவேளை மனுதாரருடைய சட்டத்தரணி முன்வைத்த வாதத்தில் மூன்றாவது எதிர்மனுதாரரான கங்கா ஜெயபாலன் என்பவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த முகப்புத்தகத் தளத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றினையும், நீதிவானையும் அவதூறு செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தமையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

குறித்த எதிர் மனுதாரரின் பதிவு நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன் நீதிவானின் இறையாண்மையை பாதிப்பதாகவும் கருதிய மன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரரின் சட்டத்தரணி குற்றவியல் சட்டத்தின் கீழ் பிறிதொரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தினார்.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் வழிகாட்டலில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தார்.

சில எதிர் மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி மகாலிங்கம் மயூரன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 

நீர்கொழும்பு சிறையில் 9MM வெற்று தோட்டாக்கள்! CID யின் அதிர்ச்சி தகவல்கள்

நீர்கொழும்பு சிறையில் 9MM வெற்று தோட்டாக்கள்! CID யின் அதிர்ச்சி தகவல்கள்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகும்! அரசுக்கு கடும் எச்சரிக்கை

இன்னும் இரண்டு ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகும்! அரசுக்கு கடும் எச்சரிக்கை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US