வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்! சுமந்திரன் சாடல்

M A Sumanthiran Ranil Wickremesinghe ITAK
By Kumar Apr 21, 2025 11:26 PM GMT
Report

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு முன்னால் சென்ற குண்டுதாரி! ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நேரடியாக பார்த்த பெண்ணின் பகிரங்க வாக்குமூலம்

தனக்கு முன்னால் சென்ற குண்டுதாரி! ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நேரடியாக பார்த்த பெண்ணின் பகிரங்க வாக்குமூலம்

ஒத்திவைப்பட்ட தீர்ப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு நேற்றையதினம்(21) தீர்ப்புக்காக ஒத்திவைப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு - செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் - மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபகளுக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்றையதினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கௌ்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையானது கட்டளைக்கு 30ம்திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் முன்னிலையாகி வழக்காடியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

யாழில் மூளைக் காய்ச்சலால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

புதிய வழக்கு 

அவரது சமர்ப்பணத்தின்போது குறித்த வழக்கானது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருகைதந்தபோது அதற்கு எதிராக போராட்டம் நடாத்தியதாக வழக்கு பொலிஸாரினால் ஏறாவூர் நீதிமன்றில் 36பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டபோது நீதிவான் நீதிமன்ற நீதிபதியினால் முறையான ஆதாரங்கள் வழங்காமல் தள்ளுபடிசெய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு மீண்டும் அதே தகவலுடன் பொலிஸாரினால் புதிய வழக்கு 30பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டது.

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்! சுமந்திரன் சாடல் | Case Filed For Protest On Ranil Visit

இந்த வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள்,போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இணைக்கப்பட்டு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் நீதிபதி இடமாற்றத்தினால் சென்ற நிலையில் அவரின் கட்டளையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் குற்றப்பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு நடாத்தப்படுகின்றது.

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் மக்கள் போக்குவரத்தை தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டே முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்பின் முரணான இரண்டு நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இரண்டாவது கட்டளை முதலாவது கட்டளை இருப்பதை மறந்து சட்டத்தின் உள்ள முதலாவது கட்டளை கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த இரண்டாவது கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது- ரணில் விக்ரமசிங்க

உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறாது- ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க

இதேநீதிமன்றம் இதனை மாற்றமுடியும்.வழக்கினை தள்ளுபடிசெய்யவேண்டும். வீதியை போராட்டக்காரர்கள் மறித்தார்கள் என்பது ஒரு சிறுவிடயம் இந்த நாட்டில் நடக்கின்ற விடயம். சட்டம் சிறுசிறு விடயங்களை கவனத்தில்கொள்ளாது.

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்! சுமந்திரன் சாடல் | Case Filed For Protest On Ranil Visit

சிறிய விடயத்திற்கு வழக்கினை தாக்கல்செய்து அனைவரது நேரத்தினையும் வீணடித்து எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் நேரத்தினையும் வீணடித்து இந்த வழக்கினை தாக்கல்செய்யப்பட்டுள்ளதனால் இந்த வழக்கு தள்ளுபடிசெய்யவேண்டும்.

வீதியை மறித்து போராட்டம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு விநோதமான குற்றச்சாட்டு. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க இங்கு வரும்போதுதான் அப்படி செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தது தலைநகரில் பல இடங்களில் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியதானால் தான்.

எனவே புதிய புதிய சிந்தனையில் விநோதமான வழக்குகளை தாக்கல்செய்து நீதிமன்ற நேரத்தினை வீணாக்ககூடாது என்ற சமர்ப்பணத்தினை முன்வைத்தார். சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி கட்டளைக்காக வழக்கினை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US