பாலசுந்தரம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு! - மெய்ப் பாதுகாவலரின் விளக்கமறியல் நீடிப்பு (Photos)
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசலுக்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் வழக்கு விசாரணை இன்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கில் நீதிமன்றில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினை பரிசீலனை செய்த நீதிவான்.
குறித்த அறிக்கையில் உள்ள திருத்தங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் வழக்கில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணையானது எதிர்வரும் 14ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டுள்ள மெயப் பாதுகாவலரின் விளக்கமறிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri