சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாதோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோவிட் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுவோருக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி பேணாதவர்கள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்தவறும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவதானிப்பதற்கும் பண்டிகைக் காலத்திலும் உணவுப் பொருட்கள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக விற்பனை செய்யப்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்வதற்கு நாடு தழுவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கோவிட் சுகாதார விதிகளை பின்பற்றாத பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் தேவையற்ற வகையில் ஒன்று கூடுவதனை தவிர்க்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். உரிய முறையில் முகக்கவசங்களை அணிந்து வெளியே செல்லுமாறு கோரியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
