ரொஷான் ரணசிங்கவுக்கு எதிரான வழக்கு தவறானது: சபாநாயகர் வெளியிட்டுள்ள தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறானது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக எவராலும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் தாய் - தந்தைக்கு நேர்ந்த கொடூரம்! வீட்டிற்கு வந்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி (Video)
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சபையில் கூறும் கருத்துகளுக்காக யாரும் வழக்குத் தொடர முடியாது என்பது தெளிவானது என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதித்துறை கையாண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |