பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யப் போவதாக அசேல சம்பத் தெரிவிப்பு
பொலிஸாருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி தொடர்பில் சமூக ஊடகத்தில் மேற்கொண்ட பதிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தாம் கைது செய்யப்பட்ட போது தமது மகன் மற்றும் மனைவி தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக தனது குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டை பதிவு செய்ய பிலியந்தலை பொலிஸ் மறுத்துவிட்டதாகவும் சம்பத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சம்பத், குற்றவியல் புலனாய்வுத் துறையால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவரது குடும்பத்தினர் அவர் குழு ஒன்றினால் குழுவினரால் கடத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் , தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அளித்த முறைப்பாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்ட்டதாக பொலிஸார் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
