இலங்கை தேசிய கொடி பொறித்த தரைவிரிப்பு விவகாரம்! இலங்கையின் கோரிக்கைக்கு சீனாவின் பதில்
பல தசாப்தங்களாக இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்காக சீனா ஆதரவளித்து வருகின்றது என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை தேசிய கொடியுடனான தரைவிரிப்புகள் மற்றும் பாதணிகள் உலகின் முன்னணி இணைய வழி விற்பனை தளம் அமேசானில் விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சீன தூதகரகம் இவ்வாறு கூறியுள்ளது.
இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் தரைவிரிப்பு ஒன்றை சந்தையில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின், வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் தரைவிரிப்பை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகின்றது.
இது குறித்து பலரும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சீனாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை உடன் தொடர்பு கொள்ளுமாறு பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்திருந்தார்.
அத்துடன், கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கும் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சீன தூதரகம் இவ்வாறு தெரிவித்துள்ளது. “தேசிய கொடிகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இதே போன்ற தயாரிப்புகளை அமேசானில் பல்வேறு நாடுகளின் விற்பனையாளர்கள் விற்கிறார்கள்.
எவ்வாறாயினும், பல தசாப்தங்களாக இலங்கையின் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்காக சீனா ஆதரவளித்து வருகின்றது என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
On Flag Mat issue:
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) March 12, 2021
National Flags must be fully respected.
Concern has been conveyed for investigation.
Similar products are sold by sellers from various countries on Amazon.
China has been supporting Sri Lanka for its peace, prosperity and dignity for decades.
full text:? pic.twitter.com/sSnOSkp2xP

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
