காலியில் இளம் பெண் காரில் கடத்தி செல்லப்பட்டார்
இளம் பெண்ணுடன் கார் ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் காலி - கராபிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வாகனம் மற்றும் பெண் கண்டுபிடிக்கப்பட்டாலும், குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை தெரிவிக்கப்படுகின்றது.
காரபிட்டி மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஒரு வங்கியின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இரண்டு இளம் பெண்கள் வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு பெண் வங்கிக்குச் சென்றிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் மற்ற பெண்ணுடன் காரை கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட பெண் காலி - ஹியாரே நகரில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் கொள்ளைக்காரன் அந்த பெண்ணை ரத்கமவில் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், முறைப்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இன்று பூசா அருகே கைவிடப்பட்ட நிலையில் வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri