இங்கிலாந்தை எச்சரித்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
வாய்ப்பு கிடைத்தால் பேர்ஸ்டோவை ஆட்டமிழப்பு செய்தது போல் மீண்டுமொரு ஆட்டமிழப்பு செய்வேன் என இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி எச்சரித்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரியால் ஆட்டமிழப்பு செய்யப்பட்ட விதம் சர்ச்சையைக் எழுப்பியது.
இந்த விடயத்தில் விதிகளுக்கு உட்பட்டே ஆட்டமிழப்பு செய்யப்பட்டதால் மூன்றாம் நடுவர் ஆட்டமிழப்பு என தீர்ப்பளித்தார்.
இருப்பினும், ஆஸ்திரேலிய அணி விளையாட்டின் மாண்பை பாதிக்கும் வகையில் இங்கிலாந்து வீரரை ஆட்டமிழப்பு செய்ததாக பலரும் விமர்சித்தனர்.
Ashes 2023: Jonny Bairstow ducks the ball & walks out of his crease, thinking the ball is DEAD ?
— Praneet Samaiya (@praneetsamaiya) July 2, 2023
But Alex Carey throws the ball to the stump. Third Umpire Marais Erasmus gave him RUN OUT Lots of BOOS #Lords #Ashes #Ashes2023 #JonnyBairstow #ENGvsAUSpic.twitter.com/cCMabTsZJF
இங்கிலாந்து ரசிகர்களும் அவுஸ்திரேலிய அணி ஏமாற்றுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவகாரம் இங்கிலாந்து பிரதமர் விமர்சிக்கும் அளவுக்கு பெரிதானது.
பவுன்ஸசர் பந்து வீசும் திட்டம்
மேலும் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் அலெக்ஸ் கேரி இது குறித்து தெரிவிக்கையில்,
இது போன்ற விஷயங்கள் முன்பும் நடந்திருக்கிறது. எனக்கு ஆதரவு கிடைத்ததாகவே உணர்கிறேன். எங்களது அணி வீரர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.
எங்களுக்கு எது முக்கியம் என்பது தெரிந்திருந்தது. மீண்டும் அதே போன்று ஆட்டமிழப்பை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக மீண்டும் செய்வேன்.
பேர்ஸ்டோ தனது இடத்திலிருந்து நகர்ந்ததை உணர்ந்தே ஆட்டமிழப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன்.
நாங்கள் அவரை நகர வைப்பதற்காகவே பவுன்ஸசர் வீசும் திட்டத்தை செயல்படுத்தினோம்.
ஆனால், அந்த விவகாரம் இத்தனை நாள்கள் பேசப்படுவது சிறிது ஆச்சர்யமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.