இலங்கை மாலுமிகளுக்கு சீனாவில் தொழில் வாய்ப்பு: நிமல் சிறிபால டி சில்வா
உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான 'ஃபார் ஸிப்பிங்' இலங்கையின் பயிற்சி பெற்ற மாலுமிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
'ஃபார் ஸிப்பிங்' நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் யு யோங் ஜுன் உட்பட குழுவொன்று அமைச்சரை சந்தித்தபோது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் தொழில் வாய்ப்பு
இலங்கையில் பயிற்சி பெற்ற இளம் மாலுமிகள் பலருக்கு சீனாவில் அமைந்துள்ள தனது நிறுவனத்தில் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என யு யோங் ஜுன் தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு முறைகள் தொடர்பாக இலங்கையின் கடல் துறையில் ஈடுபட்டுள்ள பங்குதாரர்களுடன் கலந்துரையாடப்படும் என்றும் சீன நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
