நிலந்த ஜயவர்தனவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதன் பின்னணி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்தனவுக்கு இலங்கை பொலிஸின் உயர் பதவியை வழங்கும் முயற்சி தொடர்பில் கர்தினாலின் கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மை வெளிவருவதைத் தடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு பாதுகாப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்படுவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம் சுமத்தியுள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நிலந்த ஜயவர்தன அண்மையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார், அதேவேளையில் அவர் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என தகவல்களும் வெளியாகி வருகின்றன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தகவல்
தெரிந்திருந்தும், அதனை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு தெரிவிக்கவில்லை
என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
