ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கினார் கோட்டாபய? - செய்திகளின் தொகுப்பு (Video)
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கணக்குப் பார்க்க தெரியாது போல விளக்குகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan) தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கருப்பு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“அரச தலைவர் தனது விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.
நான் நினைக்கின்றேன் அரச தலைவருக்கு கணக்குப் பார்க்க தெரியாது என்று, அதேபோன்று அவருடைய ஆதரவாளர்களான இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது” எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri