வரலாற்று ரீதியாக நாடு இழைத்த தவறுகளினால் தான் இந்த நெருக்கடி நிலை
இலங்கை தற்போது எதிர்கொள்ளும் மனவுடைவுக்கு அதன் தார்மீக வீழ்ச்சியே அடிப்படைக் காரணம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரச் சரிவை மட்டுமன்றி, தார்மீக வீழ்ச்சியையும் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தார்மீக ரீதியாக எங்களால் சரியானதைச் செய்ய முடியவில்லை, மக்கள் நீதியின்
அனைத்து உணர்வையும் இழந்துவிட்டனர். எது சரி என்பதை மறந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
வரலாற்று ரீதியாக நாடு இழைத்த தவறு
21 துப்பாக்கி வேட்டுகளை தீர்த்து மரியாதை, கொடி ஏற்றல், சாலையில் அணிவகுப்பு, தூதர்கள் மற்றும் உயரதிகாரிகளை வரவழைத்து பெப்ரவரி 4ஆம் திகதி நடத்தப்பட்ட சுதந்திரதின கொண்டாட்டம், 'பிச்சைக் கிண்ணத்துடன்' சுற்றி வரும் இலங்கை ஒரு சுதந்திர தேசம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டதாக தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
வரலாற்று ரீதியாக நாடு இழைத்த தவறுகளினால் இந்த நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.
அத்துடன், குறிப்பாக திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியதன் காரணமாகவே நாடு
பெருமளவு சார்ந்து நிற்கும் பொருளாதாரமாக மாறியதாகவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
