திருகோணமலையில் கார் - வான் மோதி விபத்து
திருகோணமலை (Trincomalee) - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள வெருகல் பாலத்தில் வான் ஒன்றும் காரொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28) மாலை திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் வெருகெல் அருகே இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவத்தில் திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்கு வானில் பயணித்த ஐவரும், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை நோக்கி காரில் பயணித்த ஐவருமாக 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து மீட்டெடுத்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
