தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் - பெண்கள் மீது மோதிய கார் - ஒருவர் பலி
தென்னிலங்கையில் வீதியில் சென்ற பெண்கள் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி நகருக்கு அருகில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.
பலத்த காயமடைந்த நான்கு பெண்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
இந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மத்துகம - பொல்கம்பலா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த கார் கோட்டையில் இருந்து காலி நகரை நோக்கி பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லவன் அம்மா பற்றி சோழனிடம் முழுவதும் கூறிய நிலா, அடுத்து அவர் செய்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri