வவுனியாவில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி தீப்பற்றி எரிந்து நாசம்: இருவர் காயம்
வவுனியா, பூந்தோட்டம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும் பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இருவர் காயம்
இதனையடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
விசாரணை
அத்தோடு, வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது.
மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |