றீ(ச்)ஷாவில் குடை மிளகாய் செய்கை அமோகம்
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) குடை மிளகாய் செய்கையானது சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி இந்த குடை மிளகாய் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.
இந்நிலையில், இந்த குடை மிளகாய் செய்கையின் ஊடாக பாரிய அளவிலான விளைச்சல் கிடைத்துள்ளதையடுத்து தற்போது, 5000 கன்றுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட செய்கை 50,000 கன்றுகள் மூலம் தொடர றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தயாராகி வருகின்றது.
இதேவேளை, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது.
அத்துடன், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan