மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டியில் திடீர் சோதனை (Photos)
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்திலுள்ள சிற்றுண்டிசாலைக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவு விடுதி
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தரித்துநின்ற புகையிரதத்தில் உள்ள சிற்றுண்டிசாலை பொதுச்சுகாதார பிரிவினரால் இன்று மாலை(01.03.2023) திடீர் சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத வகையில் கரப்பான்,எறும்புகளுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த சிற்றுண்டிசாலையின் நடாத்தியவருக்கு எதிராக நாளைய தினம்(02.03.2023) நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு விமர்சனங்கள்
கோட்டைமுனைப் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் மிதுன்ராஜ் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களான கிஷான்,அமிர்தாப் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் காணப்படும்
சிற்றுண்டிசாலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
