கடும் இக்கட்டான கட்டத்தில் நாடு! இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எடுத்துள்ள அதிரடி முடிவு
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கு மேலதிகமாக, கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றன. இவ்வாறான நிலையில் பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை கொள்வனவு செய்பவர்கள் பின்னர் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால் விவசாய தேவைக்காக பீப்பாய்களுக்கு எரிபொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என விட வேண்டும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
