10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிர் செய்கை
இரண்டாம் இணைப்பு
ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிரிடப்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கொண்டு வரவுள்ள அமைச்சரவை பத்திரத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிர் செய்வது தொடர்பான யோசனையை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்க உள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.
இந்த யோசனை எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.
மேற்குல நாடுகளில் கஞ்சாவுக்கு இருக்கும் மிகப் பெரிய சந்தை வாய்ப்பு

மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு மிகப் பெரிய கேள்வி நிலவுவதாகவும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலைமையில் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட சிறந்த வழியாக இருக்கும் என ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா

இலங்கையில் பல இடங்களில் சட்டவிரோதமாக ஏற்கனவே கஞ்சா பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. எனினும் அவை போதைப் பொருளாக பயன்படுத்துவதற்காகவே பயிரிடப்படுகின்றன.
கஞ்சா சேனைகளை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். மேலும் சித்த மருத்துவம் போன்ற சுதேச மருத்துவ தேவைகளுக்காக இலங்கை கஞ்சாவை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri