அக்கரைப்பற்றுக்கு பேருந்தில் சென்ற நபர் கஞ்சாவுடன் கைது
கொழும்பு - மருதானையிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணித்த தனியார் பேருந்தில் நான்கரை கிலோகிராம் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்ற கஞ்சா வியாபாரி ஒருவர் அக்கரைப்பற்று நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று பொலிஸாருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான இன்று அதிகாலை விசேட கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றுக்கு வந்தடைந்த தனியார் பேருந்தொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே கேரளா கஞ்சாவை எடுத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து நான்கரை கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில்
முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
