அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய தமிழர்! குடியரசு கட்சியின் வேட்பாளர் கருத்து கணிப்பு வெளியானது
அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் குறித்த கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
இந்த கருத்து கணிப்பில் இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும், முதல் இடத்தை அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பும் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்கள்
அதேபோல், அக்கட்சி சார்பில் இந்திய வம்சாவளிகளான விவேக் ராமசாமி, 38, நிக்கி ஹாலே உள்ளிட்டோரும் போட்டியிடுவதற்காக, ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இவ்வாறான பரபரப்பான தேர்தல் பிரச்சாரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் சி.என்.என் பல்கலைக்கழகம் இந்த கருத்து கணிப்பினை நடத்தியுள்ளது.
இந்த கணிப்பில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பிற்கு குடியரசு கட்சியின் 39 சதவீத உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
விவேக் ராமசாமி தற்போதைய நிலையில் 13 சதவீத ஆதரவுடன், இரண்டாம் இடத்தில் உள்ளார். மற்றுமொரு இந்திய வம்சாவளி போட்டியாளரான நிக்கி ஹேலே 12 சதவீத ஆதரவுடன் 3வது இடத்திலும், நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிருஸ் கிறிஸ்டி 11 சதவீத ஆதரவுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.