புற்று நோய் மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலை
புற்று நோய் மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து புற்று நோய்க்கான மருந்து வகைகள் கிடைக்கவிருந்த போதிலும், தற்பொழுது அது ஆறு மாதங்கள் காலமதாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஏற்பட்ட கால தாமதமே இவ்வாறு மருந்து வகைகள் கிடைக்கப் பெற கால தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் புற்று நோய் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புற்று நோய்க்கான மருந்து பொருட்கள் மட்டுமன்றி ஏனைய நோய்க்கான மருந்துப் பொருட்களிலும் தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
