கோட்டாபய வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமை பதவி இரத்து
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமை பதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய நியமனங்கள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான வழிகாட்டல் வழங்கப்படும் என்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலர் மாயாதுன்னே அறிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் மாவட்டச் செயலகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிய தலைவர்கள் நியமனம்
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் வரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்திச் செல்வதற்கான இயலுமை காணப்படுவதில்லை.

ஆகையால், ஜனாதிபதியால் புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பிற்பாடு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு அவசியப்படும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறியத்தருகின்றேன்.
அத்தோடு, புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால்
வழங்கப்படும் புதிய ஆலோசனைகளின் படி, அவர்களின் எரிபொருள் செலவு உள்ளிட்ட
விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam