உக்ரைனுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க மிரட்டல்!
தானிய ஒப்பந்தத்தை ரத்துச் செய்வது தொடர்பில் ரஷ்யா உக்ரைனுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய தனது ஏற்றுமதிக்கான தடை நீடிக்குமானால் உக்ரைனுடனான கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரத்துச் செய்யப்போவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
அங்காராவில் துருக்கி வெளியுறவு அமைச்சரை சந்தித்தபோது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov) இதனை தெரிவித்துள்ளார்.
தடைகள் அகற்றல்
காப்புறுதி, துரித நிதிப் பரிமாற்ற முறை ஆகியவற்றின் தாமதத்தால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மாஸ்கோவின் வேண்டுகோளுக்கு ஏற்பத் தடைகளை அகற்றி மே மாதத்துக்குப் பிறகும் தானிய உடன்பாடு தொடர வழியமைக்கத் துருக்கி உறுதியளித்துள்ளது.
உலகின் உணவுத் தட்டுப்பாட்டு பிரச்சினையை சமாளிக்க கருங்கடல் தானிய ஒப்பந்த உதவுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.