வர்த்தமானியை ரத்து செய்க : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரைபை தயாாிப்பதற்கான செயலணிக்கு கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வா்த்தமானி அறிவித்தலை, ரத்துச்செய்ய வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் கோாிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,
இந்த வா்த்தமானி வெளியிடப்பட்டமை குறித்து தாம் அதிா்ச்சியடைந்ததாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் பாாிய பொருளதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள், பல கேள்விகளை எழுப்புகின்றன.
2019 தோ்தலுக்கு முன்னரும் பின்னரும் பேசப்பட்டு வந்த ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயம், பெரும்பான்மையினக் கருத்தியலைக்கொண்டுள்ளது.
சா்வதேச மனித உாிமைகள் அடிப்படையில், இலங்கையின் அரசியலமைப்புக்கு முரண்பட்ட வகையில் தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன.
மனித உாிமைகளின் கடமைகளுக்கு ஏற்ப இந்த தனிப்பட்ட சட்டங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு நோ்மை மற்றும் திறன் கொண்ட செயல்முறை அசியமாகும்.
எனினும் ஞானசார தேரரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள செயலணி அத்தகைய அணுகுமுறைகளுக்கு எதிரானது என்று மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பு தொிவித்துள்ளது.
எனவே இது தொடா்பான வா்த்தமானி ரத்துச்செய்யப்படவேண்டும் என்று அமைப்பு கேட்டுள்ளது.
இலங்கையில் சட்ட சீர்திருத்தம் ஒருபுறம் இருக்க ஞானசார தேரர், ஆட்சியில் எந்தவொரு பங்கையும் வகிக்க தகுதியற்றவா் என்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam