இலங்கை வந்த கனேடிய மாணவியின் நெகிழ்ச்சி செயல்
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த கனேடிய பல்கலைக்கழக மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
Audette Bettman என்ற குறித்த பெண் அம்பலாங்கொடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் எவ்வாறு பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர் என்பதை அவதானித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
குறிப்பாக இதற்கு தேவையான பணத்தை இந்த மாணவி தனது தாய், தந்தை மற்றும் நண்பர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இந்த பணிகளை செய்வதற்கு அம்பலாங்கொடை மாவட்ட செயலகத்திலிருந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன.
அதற்கமைய 134 குடும்பங்களுக்கு இப்பல்கலைக்கழக மாணவி இந்த உதவிகளை ஏற்பாடு செய்துள்ளார்.