அமெரிக்காவில் கனேடியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அமெரிக்காவில் கனேடியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிரியாவில் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயல்
அப்துல்லாஹி அகமது அப்துல்லாஹி சிரியாவில் மக்களைக் கடத்துவது மற்றும் கொலை செய்வது உட்பட "வன்முறையான பயங்கரவாதச் செயல்களுக்கு" நேரடியாக தொடர்புடையவர் என்று அமெரிக்க வழக்கறிஞர் ராண்டி கிராஸ்மேன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சிரியாவில் சுமார் ஆறுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் மற்றும் கனேடியர்களை தீவிரவாத இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளை சம்பவம்
அப்துல்லாஹி அஹமட் அப்துல்லாஹி என்பவரே தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2017ம் ஆண்டில் அப்துல்லாஹியை கனேடிய பொலிஸார் கைது செய்ததுடன் அமெரிக்காவிற்கு நாடு கடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,கடந்த 2014ம் ஆண்டில் எட்மோன்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட்டதனையும் குறித்த நபர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,