கனடா முழுவதும் தேடப்படும் குற்றவாளி: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
கனடாவில் 53 வயதான ஆண் ஒருவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் தேடப்படும் நிலையில், அவரை கண்டுபிடிக்க கனேடிய பொலிஸார் அந்நாட்டு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஒன்ராறியோவைச் சேர்ந்த 53 வயதான இவன் பெல்க்நாப் (Ivan Belknap) என்பவரையே பொலிஸார் இவ்வாறு தேடி வருகின்றனர்.
ஏற்கனவே, இவர் மீது ஆயுத குற்றங்கள் மற்றும் தடையை மீறி ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
தொலைபேசி இலக்கங்கள்
எனினும், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இவர் மீண்டும் விதிகளை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
WANTED: Ivan BELKNAP 53 y/o, 5’11”, 186 lbs. Known to frequent Kingston, Smith Falls and Carleton Place area. If you have any information, contact Crime Stoppers 1-800-222-8477, the Provincial ROPE Squad Main Office at 416-808-5900 or 1-866-870-7673, or 911. ^kk pic.twitter.com/wecUsGYBPG
— OPPCommunicationsER (@OPP_COMM_ER) November 26, 2024
இவரது தலையிலும் இடது கையிலும் கோட்டைக்கோபுரம் மற்றும் பறவை, வலது கையில் போர்வீரர், படகு, வைக்கிங் உள்ளிட்ட பச்சைகளை குத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரை பற்றிய தகவல்களை 'ROPE Squad' முதன்மை அலுவலகத்தை '416-808-5900' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது 'Crime Stoppers' எனும் அமைப்பை '1-800-222-8477' என்ற எண்ணில் அழைத்து தகவல் வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |