கனடா குடிமக்கள் காஷ்மீருக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்
கனடா குடிமக்கள் காஷ்மீருக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கனடா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எதிர்பாராத சூழல் நிலவுவதாகவும், தீவிரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதம், கடத்தல் போன்ற பிரச்சனைகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா
கனடா குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசித்துவந்த ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார்.
கனடாவில் நடைபெற்ற கொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார்.
கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளது.