கனடா, பிரித்தானியாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்படும் தமிழர்கள்
மேற்குலக நாடுகளில் தொழில்களை பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு பகுதிகளிலும் மோசடி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் முகவர் நிலையங்களுக்கு பணம் செலுத்தவதற்கு முன்னர் உரிய நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பிரித்தானியா, கனடா, இத்தாலி போன்ற நாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி, கோடிக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பண மோசடி
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனடா, பிரித்தானியாக்கு செல்வதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து, பல தமிழர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இது குறித்து பல்வேறு முறைப்பாடுகளில் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        