கனடா, சுவிஸ் நாடுகளுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட இருவர்
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல மில்லியன் ரூபா நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
பணத்தை இழந்தவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் தென்னிலங்கை சேர்ந்த 04 பேரிடம் தலா 13 மில்லியன் ரூபாய் வீதம் 52 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேக நபர் ஒருவர் பெற்றுக் கொண்டுள்ளார்.
பண மோசடி
எனினும் வழங்கப்பட்ட உறுதிக்கு அமைய அவர் தொழில் பெற்றுக்கொடுக்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சுவிட்சர்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி 13 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.