தமிழர் நினைவு தினத்தில் கனேடிய பிரம்டன் நகரில் சுடரேற்றல் நிகழ்வு
தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மாலை, கனடாவின் பிரம்டன் நகர சபையின் ( Brampton City Hall) மணிக்கூண்டு கோபுரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற சுடரேற்றல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தமிழர் வாழும் இடங்களில் நினைவுக்கூரப்படுகின்றன.
இதன் ஒருகட்டமாகவே கனடாவில் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இதேவேளை இலங்கையின் நாடாளுமன்றத்திலும் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், போரில் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.
This evening, #Brampton City Hall’s Clock Tower will be lit red and yellow in recognition of Tamil Remembrance Day. ❤️?
— City of Brampton (@CityBrampton) November 26, 2021
Learn more about clock tower lightings https://t.co/wxtEB4r1BJ. pic.twitter.com/rS6PxY3PBa


Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
