ராஜபக்சர்களால் மன்னிக்கப்பட்ட இருவர்! கனடா எடுத்த முக்கிய முடிவு(Video)
இலங்கை தீவில் நிறைவேற்று ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கனடா தடை விதித்தது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“இந்த ஆண்டு கனடா இரண்டு மூத்த ராஜபக்சர்கள் உட்பட இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த இரண்டு ராஜபக்சர்களும் யாரென்றால் மூத்த ராஜபக்சர்களால் மன்னிப்பு வழங்கப்படடவர்கள்.
இலங்கை தீவின நிறைவேற்று ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. எனவே உள்நாட்டு நீதியை ஒரு நாடு தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.
இதற்கமைய உள்நாட்டு நீதி என்பதை அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாடு நிராகரித்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
