கொடூர காட்டு தீ! அமெரிக்கர்களை காப்பாற்றும் முயற்சியில் கனடா
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க கனடா தீயணைப்பு படையினரும் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிய காட்டுத் தீ காரணமாக 300,000 பேர் வரை அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் 10,000இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் 19,000 ஏக்கர் நிலத்தையும், அல்டடேனா பகுதியில் 13,000 ஏக்கர் நிலத்தையும் காட்டுத் தீ எரித்துள்ளது.
கனடாவின் உதவிக்கரம்
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கனேடிய அரசாங்கத்திற்கு சொந்தமான விமானம், அணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தொடர்பான செய்தியை கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
I spoke with @GavinNewsom last night. We both know that Canada and the United States are more than just neighbours. We’re friends — especially when times get tough.
— Justin Trudeau (@JustinTrudeau) January 10, 2025
California’s always had our back when we battle wildfires up north. Now, Canada’s got yours.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், கனடாவிற்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், கனேடியர்கள் அமெரிக்கர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |