ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ள உலக நாடுகள்! வலுக்கும் எதிர்ப்பு
உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் வழங்குவதாக கனடா அரசு உறுதி அளித்துள்ளது.
டொரோண்டோவில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஸ்மிஹல்,கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவிகள்
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கு கனடாவில் இருந்து 21,000 ரைபிள்கள்,38 இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 24 லட்சம் தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன் ரஷ்யாவை சேர்ந்த 14 நபர்கள் மற்றும் 34 நிறுவனங்கள் மீது கனடா அரசு பொருளாதார தடைகளை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நிதித்துறையுடன் தொடர்புடைய 9 நிறுவனங்களுக்கு கூடுதல் தடைகளை விதிப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது பொருளாதார தடை
இதேவேளை ரஷ்யா மீது சர்வதேச நாடுகள் இணைந்து வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி தனது படைகளை அனுப்பி இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
இதற்கு உக்ரைன் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில்,ஓராண்டுக்கும் மேலாக இந்த தாக்குதல் நீடித்து வருகின்றது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆகியவை பல்வேறு இராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா




