கனேடிய பொது தேர்தலில் வெற்றியை பதிவு செய்துள்ள தமிழ் வம்சாவளி பெண்
கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் (Anita Anand) வெற்றியை பதிவு செய்துள்ளார்.
கனடாவில் இம்முறை இடம்பெற்றுள்ள பொது தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதன்படி ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவருகிறது.
இந்த நிலையிலேயே லிபரல் கட்சி சார்பில் Oakville தொகுதியில் போட்டியிட்ட, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் முன்னாள் அமைச்சரான அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
#Elxn44 - ✅ La candidate libérale et ancienne ministre des Services publics et de l'Approvisionnement Anita Anand est réélue dans la circonscription d’Oakville.#polcan #cdnpoli pic.twitter.com/fgU5iaBTnU
— Radio-Canada Info (@RadioCanadaInfo) September 21, 2021
அவர் 14,511 வாக்குகளை பெற்று 45.7 சதவீதத்தை பதிவு செய்துள்ளதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கெரி கொல்போர்ன் 38.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர் என்பதுடன், தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்...
கனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றுள்ள ஈழத் தமிழர்
மூன்றாவது முறையாக கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ - பெரும்பான்மை இல்லாததால் சிக்கல்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
