கனடாவின் வெள்ளை வால் மான்களையும் விட்டு வைக்காத "கோவிட்"
கனடாவில் மூன்று மான்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் எஸ்ட்ரி பகுதியில் வெள்ளை வால் மான்களுக்கே இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் மான்களிடம் நோய்க்கான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. அவை அனைத்தும் வெளிப்படையாக ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வனவிலங்குகளில் கோவிட்டின் முதல் கண்டறிதல் இதுவாகும்.
எனினும் மான்களிடமிருந்து மனிதர்களுக்கு கோவிட் பரவுவது கண்டறியப்படவில்லை.
இதேவேளை அமெரிக்க விவசாயத் துறையின் ஒரு ஆய்வில், நியூயோர்க், மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய நான்கு மாநிலங்களில் 2021 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மாதிரிகளின்போது 385 காட்டு மான்களில் 40 வீதமான மான்களுக்கு, வைரஸுக்கு எதிரான பிறப்பொருள் எதிரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
