விசா இன்றி கனடாவுக்கு பயணம் செய்யலாம்: அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு- செய்திகளின் தொகுப்பு
விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் எனக் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத்துறை அமைச்சரான சீன் ஃப்ரேசர் (Sean Fraser) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி நேற்றைய தினம் (06.06.2023) முதல், 13 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டு வைத்திருக்கும் பயணிகள், Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்குப் பயணிக்கலாம்.
என்றாலும், இந்த சலுகை, அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது செல்லத்தக்க United States non-immigrant visa என்னும் அமெரிக்கத் தற்காலிக விசாவோ வைத்திருப்பவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொருந்தும் என்றொரு நிபந்தனை உள்ளதை மறுப்பதற்கில்லை.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,