மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது! வெளியான அறிவிப்பு
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு யாராவது பரிந்துரைத்தால், நாங்கள் பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளோம்.

இருப்பினும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக அமையாது என்பதுடன், நாட்டை சீர்படுத்துவதற்கு எந்த வகையான தீர்வையும் வழங்காது. மக்களுக்கு எந்தவிதமான நன்மையோ அல்லது நிவாரணமோ வழங்க முடியாது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை குறைந்தது 4,000 ஆகக் குறைத்து, விருப்புரிமை முறை ஒழிக்கப்பட வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்தொற்றுமை ஏற்படாமல் திட்டமிட்டு நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை மக்கள் உணர்ந்து செயற்படுவார்கள்.
வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க மக்கள் மத்தியில் இந்த நேரத்தில் அதிக உற்சாகம் இருக்காது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam