வீதி விதிமுறைகளை மீறியவர்களிடம் இதுவரை ஒரு கோடியே 36 லட்சம் அறவிடப்பட்டதாக தகவல்!
சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் உரிய ஒழுங்கும் இருக்கின்ற போதுதான் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுக்க முடியும் என கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே இப்நுா அஸார் (M. K. Ibnu Azhar) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி விபத்துக்களை குறைப்பது அல்லது தடுப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதல் இன்று வரை வீதி விபத்துக்களால் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இதைவிட கடந்த ஜனவரி மாதம் முதல் இது வரைக்கும் சுமார் ஒரு கோடியே 36 லட்சம் ரூபா சாரதிகளின் தவறான முறையில் வாகனங்களைச் செலுத்துதல் அல்லது வீதி ஒழுங்குகளை கடைப்பிடிக்காமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக நீதி மன்றம் ஊடாகவும், தபாலகங்கள் ஊடாகவும் அறவிடப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த ஆண்டில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு தண்டங்களை அறவிடுதல் அல்லது தண்டனைகளை வழங்குவதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியாது மாறாக பொதுமக்கள், சாரதிகள் விழிப்புணர்வாக நடந்துகொள்ளவேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசங்கள் சிவில் நிர்வாகத்துக்குள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள்ளேயே வந்துள்ளது.
இதில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.
மானவர்களுக்கும், சகல பொது மக்களுக்கும் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும்.
அத்துடன் கிளிநொச்சியில் கடமையாற்றுவதற்கு போதிய அளவு பொலிஸார் இல்லாத நிலை கானப்படுகின்றது.
இருக்கின்ற பொலிஸாரை வைத்து இங்கே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டும்.
ஒரு குழந்தை கருவாகி உருவாகி இறக்கின்ற வரைக்கும் அவரை பாதுகாப்பதற்கான பொறுப்பு பொலிஸாரிடம் இருக்கின்றது. அந்த வகையிலே பொதுமக்கள் பாதுகாப்புக்காக வீதி விபத்துக்கள், கொலை, கொள்ளை, களவு என்பவற்றை தடுக்க வேண்டிய கடுமையான உழைப்பும் போலிஸாரிடம் இருக்கின்றது.
ஆகவே ஒரு குற்றச் செயல்களை தடுப்பதற்கு அல்லது விபத்துகளை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் மட்டத்திலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
வாகனங்களை செலுத்துகின்ற ஒவ்வொருவரும் மிக அவதானமாக வீதி ஒழுங்கு விதிகளை மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
