எரிவாயு விபத்துக்களுக்கு நட்டஈடு பெற முடியும்?
நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பில் நட்டஈடு பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துக்களுக்கு எரிவாயு நிறுவனங்கள் பொறுப்பு என உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடர முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
சட்டத்துறை வல்லுனர்களால் இந்த விடயம் சுட்டிக்காட்டி குறிப்பிடப்படுகின்றது.
எரிவாயு விநியோகம் செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களின் நடவடிக்கையினால் விபத்துக்கள் ஏற்பட்டது எனத் தெரியவந்தால் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர முடியும் என நீதி அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எரிவாயு கலவையில் ஏதேனும் பிரச்சினை காரணமாக இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது என இறுதி பரிசோதனைகளில் தெரியவந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நட்டஈடு கோரி வழக்குத் தொடர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam