யாழில் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் ஆரம்பம் (Photos)
ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு யாழ் மாவட்டத்தில் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி நிறுவனமும், யாழ் மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகமும் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் விருத்தி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாமில் கலந்துகொள்ளும் பயனாளிகள் தமது பதிவுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழிற்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ், இந்திய தூதரக அரசியல் ஆலோசகர் பானு பிரகாஸ், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள்,இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
