பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெற்ற மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்
வெளியாகியுள்ள 2022(2023) உயர்தரப் பரீட்சையின் மீள் ஆய்வு முடிவுகளின்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022(2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
மேலும், தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இன்று (22) முதல் 29 ஆம் திகதி வரை இணையம் மூலம் சமர்பிக்க முடியுமெனவும் அறிவித்துள்ளது.
திறன் தேர்வுகள்
அதன்படி, அந்த விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் திறன் தேர்வுகளின் தற்போதைய கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க இந்த வாய்ப்பு பொருந்தாது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri