விசேட குற்றப்பிரிவு காரியாலயத்திற்கு வருகை தருமாறு இந்திரகுமார் பிரசன்னாவிற்கு அழைப்பு
கிழக்கு மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னாவை விசாரணைக்கு உட்படுத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இ.பிரசன்னா தெரிவித்துள்ளார்.
நேற்று அவரது வீட்டுக்கு வருகை தந்த இரண்டு புலனாய்வுத்துறையினர் அவரிடம்
வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காக நாளை அவரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்தில் அமைந்துள்ள குற்றப்புலானாய்வு பிரிவுக்கு வருமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக
செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், முகநூல் போராளிகள் போன்றவர்கள் தொடர்ச்சியாக
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், அச்சுறுத்தும் நிலைமையும் மாவட்டத்தில் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: பிக்பாஸ் வீட்டிற்குள் போன் செய்த விஜய் சேதுபதி! மாட்டிக் கொண்ட குழந்தை முக கொலைகாரி Manithan
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan